இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உருவாகும்..!
ஓமிக்ரான் தொற்றால் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என்றும் கொரொனா தீவிரத்தை மதிப்பிடுவதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட சூப்பர் மாடல் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் அதிகரித்து வருவதால் இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என்று தெரிவித்தார்.
அதே சமயம் தற்பொழுது மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் உள்ளதால் இரண்டாவது அலையை விட மூன்றாவது அலையில் லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறினார். இரண்டாவது அலையை விட அதிகமான தினசரி பாதிப்புகள் இருப்பதற்கு சாத்தியமில்லை என்றும் வித்யாசாகர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





