சாலையை ஒட்டிவைக்கப்பட்ட தொட்டி.. அதிரடி காட்டிய பொதுமக்கள்..!
ஆம்பூர் அருகே சின்னமலையான் பட்டு கிராமத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த தண்ணீர் தொட்டியை ஊர்மக்கள் கடப்பாரை கொண்டு இடித்தனர்.
சங்கர் என்பவரது வீட்டின் வெளியே உள்ள அந்த தொட்டி போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக அவரிடம் ஊர் மக்கள் பலமுறை கூறியுள்ளனர்.
அதனை அவர் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் சங்கர் வீட்டில் இல்லாத நேரத்தில் தொட்டியை இடித்து தள்ளினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






