--- --:--:-- --

சாக்கடைக்குள் கிடந்த தலை.. பிரிட்ஜுக்குள்ள இருந்த உடல் ஆறு துண்டுகளாக வீசிய கொடூரம்..!

5

ஹைதராபாத்தில் 7 லட்சம் ரூபாய் கடனை திருப்பி கேட்ட பெண்ணை கொலை செய்து ஆறு துண்டுகளாக ஃப்ரிட்ஜில் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

55 வயதான அனுராதா ரெட்டி கணவனால் கைவிடப்பட்ட நிலையில் தான் வாடகைக்கு வசித்து வந்த வீட்டின் உரிமையாளரான 48 வயது சந்திரமுகனுடன் திருமணத்தை மீறிய தொடர்பிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

அனுராதாவிடம் இருந்து வட்டிக்கு கடன் பெற்றிருந்த சந்திரமோகன் அதனை திருப்பி செலுத்தவில்லை என தெரிகிறது. தொடர்ந்து பணத்தைக் கேட்டு வந்த அனுராதாவை கொலை செய்து உடலை பிரிட்ஜிலும் தலையை பிளாஸ்டிக் பையில் வைத்து சாக்கடையிலும் வீசி உள்ளார்.

 

சாக்கடைக்குள் தலை கிடந்தது குறித்து துப்புரவு தொழிலாளி அளித்த தகவலை தொடர்ந்து போலீசார் தலையை கைப்பற்றினார். அப்பொழுது அந்த பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பொழுது தலையை சந்திரமோகன் வீசி சென்றது பதிவாகியிருந்ததை கண்டு போலீசா சந்திரமோகனை கைது செய்து மற்ற உடல் பாகங்களையும் கைப்பற்றினர்.

 

Right Menu Icon