--- --:--:-- --

கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி அன்னூர் பகுதியில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சபாநாயகர் மகன் !!!

14

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திலும், சென்னையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே நோய்த்தொற்று 50,60 என இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1082 ஆக உயர்ந்துள்ளது.

 

இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று செல்ல கால அளவினை அரசு அறிவித்துள்ளது.ஊரடங்கினால் கூலி வேலைக்கு செல்வோர்,தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் வேலைக்கு செல்ல முடியவில்லை.மாநில அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து தங்கு,தடையின்றி வழங்கி வருகிறது.

 

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்காக நிதியினை வழங்குமாறு வேண்டுகோள் விடப்பட்டது.தொழிலதிபர்கள்,தன்னார்வலர்கள்,மாணவர்கள் என பல தரப்பினரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக வழங்கி வருகின்றனர்.இதுவரை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக சுமார் ரூ.306.42 கோடி வந்துள்ளது.மேலும்,அரசியல் கட்சியினரும்,தன்னார்வலர்களும் தாமாக முன்வந்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டர்பாளையம், பிள்ளையப்பம்பாளையம்,மசக்கவுண்டன் செட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.அன்னூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அம்பாள் பழனிச்சாமி தலைமையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் அவர்களின் மகனும்,அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் கொங்கு மண்டல பொறுப்பாளருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் கபசூரண குடிநீரை வழங்கி துவக்கி வைத்தார்.இதில் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் சாய்செந்தில்,தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட இணைச்செயலாளர் பிரபு,ஒட்டர்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி கிருஷ்ணமூர்த்தி, பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமண மூர்த்தி , மசக்கவுண்டன் செட்டிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பாவதி பாக்கியராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங் கும் போது அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையிலும் குடையை பிடித்தபடி தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அவர்களின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நிவாரண உதவிகளை வழங்கியது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Right Menu Icon