--- --:--:-- --

ஆர்.எஸ்.மங்கலத்தில் தந்தையை கொலை செய்த மகன்..!

11

ஆர்எஸ் மங்கலம் அருகே ரவுடியான மகன்,  தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர் எஸ் மங்கலம் தாலுகா, பெருமாள்மடை கிராமதில் வசித்து வரும் 85 வயதான முதியவர் உலகன் இவருடைய மகன் மணிமாறன் .

 

இவன் மீது பல்வேறு வழக்குகள் ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது காவல் நிலைய பதிவேட்டில் ரெளடியாக உள்ளான். இவன் அடிக்கடி தனது தந்தையிடம் பூர்வீக சொத்துக்களை எழுதி தர கேட்டுள்ளான். இவன் அடிக்கடி மது போதையில் வந்து தகராறு செய்வதால் சொத்துக்களை காப்பாற்ற வேண்டி முதியவர் எழுதிக் கொடுக்க மறுத்ததாக தெரிய வருகிறது.

 

இதனால் ஆத்திரத்தில் இருந்த மணிமாறன் நேற்று நல்லிரவில் வீட்டு னுள் தூங்கிக் கொண்டிருந்த உலகனை அறிவாளால் சரமாக மாறியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளான்.

 

தகவலறிந்து சம்பவத்திற்கு சென்ற திருவாடானை டிஎஸ்பி நிரேஷ்பழனிவேல் உடலை கைப்பற்றி பிணக்கூறாய்விற்காக  ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. கொலையாளி மணிமாறனை தீவிரமாக ஆர் எஸ் மங்கலம் காவல் நிலையத்தார் தேடி வருகின்றனர்

Right Menu Icon