11 மாதங்களுக்கு முன் இறந்த தாயின் உடலைத் தோண்டி எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்த மகன்..!
பெரம்பலூர் அருகே இறந்து போனதால் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட மகன் 11 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட அவரது சடலத்தை தோண்டி எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தந்தை பல ஆண்டுகளுக்கு முன் இறந்து போன நிலையில் ஒரே மகனான இவர் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பதினோரு மாதங்களுக்கு முன் அவரது தாயும் உடல்நிலை குன்றி இறந்து இருக்கிறார்.
தாயின் மீது கண்மூடித்தனமான அன்பு வைத்திருந்த மகன் அவரது இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் லேசான மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி தாயின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை சுற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் காலை உறவுக்காரப் பெண் ஒருவர் அவருக்கு உணவு எடுத்து வந்தபோது வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே எட்டிப் பார்த்திருக்கிறார்.
சிதைந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். விசாரணையில் அது அந்த நபரின் தாயின் சடலம் என்பது தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீசார் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





