--- --:--:-- --

தந்தையின் பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடிய மகன்.!

2

சிலம்பட்டி அருகே தனது தந்தையின் பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடிய மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அருண். சுற்றுச்சூழல் துறையில் மாநில பொதுச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

 

இவர் தனது தந்தை ராஜாவின் 60வது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளார். அதன்படி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிராமத்து பொதுமக்களுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கி பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 

சுற்றுச்சூழல் மீது அதிக ஆர்வம் கொண்ட தனது தந்தையின் பிறந்த நாளில் மரக்கன்றுகள் வழங்கிக் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon