மெர்மைட்ஸ் எனப்படும் கடல் கண்ணி! கப்பல் கவிழ இவர்கள் தான் காரணமா?
மனிதர்களில் பலவிதமான ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் மனிதனின் அறிவுக்கு எட்டாத சில புதிர்களும் இவ்வுலகில் இருக்கின்றன. இந்தக் கேள்விக்கு இன்றுவரை மனிதன் விடை தேடிக் கொண்டுதான் இருக்கிறான். அது மெர்மைட்ஸ் எனப்படும் கடல் கண்ணிகளின் தேடல் தான்.
மனிதர்களின் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்று பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது 19ஆம் நூற்றாண்டில் இருந்து தான். அப்போது உலகளாவிய கடல் ஆராய்ச்சி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. முதலில் திமிங்கலங்கள் டால்பின்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் சப்தம் மற்றும் அதன் மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அந்த ஆராய்ச்சியில் இந்த உயிரினங்களை தவிர்த்து வேறு விதமான ஓசை கடலில் இருந்து வருகிறது என்பதை கண்டறிந்தார்கள். வித்தியாசமான சப்தம் ஒருபக்கம், அது என்னவாக இருக்கும் என்ற மர்மம் மற்றொரு பக்கம். அந்த காலத்தில் கடலில் நெடுந்தூரம் பயணிக்கும் மாலுமிகளின் கப்பல் விபத்தில் சிக்குவதற்கு கடல் கண்ணிகள் தான் காரணம் என்ற நம்பிக்கை காலம் முதலே பரவியிருந்தது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜிம்பாவே நீர்வளத்துறை அமைச்சர் நாட்டின் கடலோரப் பகுதியில் நீர்த்தேக்க வேலையில் ஈடுபட்டிருந்த வேலையாட்கள் கடல் கண்ணிகளால் வேட்டையாடப்பட்டு துரத்தியடிக்கப்பட்டதால் வேலைகள் நிறுத்தப்பட்டன என்று அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆராய்ச்சியாளர்கள் அக்வடிக் ஏப்ஸ் தியரி எனும் ஆய்வில் கடல் கண்ணிகளிடம் இருந்துதான் மனித இனமே உருவானது என்று கூறுகின்றனர்.
அந்த ஆய்வில் உலகின் பரிணாம வளர்ச்சிக்கு முன் உலகம் முழுவதும் தண்ணீரால் நிரம்பி இருந்தது. அப்போது மனிதர்கள் இருந்தனர். ஆனால் தண்ணீரில் வாழ்வது போன்று அவர்களின் உடலமைப்பு இருந்தது. அவ்வாறே பல நூற்றாண்டுகளுக்கு மனிதன் உயிர் வாழ்ந்தான். அதில் மிஞ்சிய ஒரு இனம்தான் கடல் கன்னிகள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அக்வடிக் ஏப்ஸ் தியரி கூறுகின்றனர்.
எவிடன்ஸ் டூ த தியரி அந்த ஆய்வில் சான்றுகள் முதலில் மனிதர்களுக்கு கடல்வாழ் உயிரினங்களைப் போன்றே உடம்பில் ரோமம் எனப்படும் முடிகள் இல்லாமல் தான் இருந்தது. இரண்டாவது பை பீடல் எனப்படும் இரண்டு கால்கள் உயிரினங்களாக மனிதன் மாற காரணம் முற்றிலும் கடல் வாழ்விலிருந்து வெளிவந்து நிலத்தில் வாழ மனிதன் ஆரம்பித்தபோது பரிணாம வளர்ச்சியில் அவள் பை பீடல் எனப்படும் இரண்டு கால்களில் உயிரினமாக மாறி விட்டார் என்பதுதான், மற்றும் தண்ணீருக்கடியில் நாம் மூச்சை அடக்கி நீந்துவதற்கும் இதுதான் காரணம் என்கின்றனர்.

பிராங்க்ளின் என்கிற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பெரும் பெர்முடா முக்கோணத்திற்கு அருகிலிருக்கும் பென்சில்வேனியாவில் கடல் கண்ணிகளை கண்டதாக குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய அமெரிக்காவின் பிரபல அறிவியல் ஆராய்ச்சி மையம் கடல்கன்னி என்ற உயிரினம் சி பையாலஜி எனப்படும் சமுத்திர உயிரியலில் இணைக்கவில்லை.
கடல் கன்னிகள் பற்றிய எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை இணையதளங்களின் மூலம் வெளியிட்டது. கடல்கன்னி என்பது பாதி பெண் உடலும், பாதி மீன் உடலும் உள்ளது. இது கற்பனையாக சித்தரிக்கப்பட்ட உயிரியல் கற்பனை உருவம் என்றும் கூறுகின்றனர். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களிலும் இந்த கடல் கண்ணிகளின் உருவமும், கதாபாத்திரமும் இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






