70 வயதை கடந்த தாய் தந்தைக்கு விஷம் கொடுத்த பள்ளி ஆசிரியர்.. மன உளைச்சலில் விபரீத முடிவு..!
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியைப் பிரிந்து வாழ்ந்த பள்ளி ஆசிரியர் சிவக்குமார் என்பவர் கடன் தொல்லை காரணமாக தனது 70 வயதை கடந்த தாய், தந்தையுடன் விஷம் அருந்தியுள்ளார்.
அவரது தாயும் தந்தையும் பலியான நிலையில் சிவகுமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்துவரும் ஆசிரியர் சிவக்குமார் விவசாயம் செய்வதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.






