6 மாதத்தில் பெயர்ந்து விழுந்த சுகாதார நிலையத்தின் மேற்கூரை பூச்சு..!
வேலூரில் 6 மாதத்திற்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூரை மேற்பூச்சு விழுந்ததால் கட்டிடத்தின் தரம் குறித்து பொதுமக்கள் இடையே கேள்விகள் எழுந்துள்ளன.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட எல்லார் நகர் பகுதியில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த மே மாதம் பயன்பாட்டிற்கு வந்தது.
6 அறைகளும் ஒரு கழிவறையும் கொண்ட இந்த கட்டிடத்தில் மேற்கூரைப்பூச்சு திடீரென பேருந்து மீது விழுந்தது. நல்வாய்ப்பாக அறையினில் நோயாளிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் பூச்சு விழுந்ததில் கட்டில், மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
இதனால் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது ஒப்பந்ததாரர் பழனிக்கு குறிப்பாணை அனுப்பி விளக்கம் கேட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.





