பட்டியலிலனத்தவருடன் வீட்டிற்கு சென்று உணவு உண்ட ராகுல் காந்தி..!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பட்டியலின குடும்பத்தவர் வீட்டிற்கு சென்று அவர்களுடன் உண்டு மகிழ்ந்தார். மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் வசிக்கும் அஜய் துக்காரா மற்றும் அஞ்சனம் ஆகிய இருவர் வசிக்கும் வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தி அவர்கள் தயாரித்த உணவு வகைகள் அவற்றின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர்களுடன் சேர்ந்து காய்கறிகள் நறுக்குவது போன்ற பணிகளை செய்து கொடுத்ததோடு உணவையும் உண்டு மகிழ்ந்தார். அந்த காட்சியை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
பட்டியலின மக்கள் என்ன உண்கிறார்கள் என்பதை பற்றி இங்கு யாருக்குமே தெரியாது எனவும் கூறியுள்ளார். பட்டியல் இனத்தவர் என்பதால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அஜய் துக்காராம் தம்பதியிடம் கேட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பட்டியலின மக்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க முன்னெடுப்புகள் தேவை என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி ஒவ்வொரு இந்தியர்களும் தாங்கள் சகோதரர்கள் என்று எண்ணம் மனதளவில் ஏற்பட வேண்டும் என்றும் அப்பொழுது தான் உண்மையான சமத்துவத்தை காண முடியும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.





