--- --:--:-- --

வெள்ளத்தில் சிக்கிய யானையை காப்பாற்ற சென்ற மீட்பு படகு வெள்ளத்தில் மூழ்கியது..! செய்தியாளரும் பலி..!

8

ரிசாவில் மகாநதி வெள்ளத்தில் சிக்கிய யானையை காப்பாற்ற சென்ற பேரிடர் குழுவினரின் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. படையினருடன் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 

ஒடிசா மாநிலத்தில் நதியை கடக்க முயன்று யானை ஒன்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது. அதை மீட்க ஒடிஷா பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு படையில் மகாநதிக்கு சென்றனர். அவர்களுடன் ஒடிசா தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர், ஒளிப்பதிவாளரும் பிரத்தியேக மீட்பு காட்சியை பதிவு செய்ய சென்றுள்ளனர்.

 

யானையை கரைப் பகுதியை நோக்கி விரட்ட முயன்ற பொழுது கரையோரத்தில் இருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு யானை மீண்டும் வெள்ளத்திற்குள் சென்றது. தொடர்ந்து யானையை மீட்க முயற்சிகளை மேற்கொண்ட பொழுது மீட்பு படகு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மூழ்கியது.

 

வெள்ளத்தில் தத்தளித்தவர்கள் கயிறுகள் மூலமாக மீட்கப்பட்டனர். செய்தியாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். செய்தியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிகழ்வால் வெள்ளத்தில் சிக்கிய யானையை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Right Menu Icon