அயோத்தியில் அடுத்த 4 மாதங்களில் ராமர் கோயில் கட்டப்படும்
அயோத்தியில் அடுத்த 4 மாதங்களில் வானுயர்ந்த ராமர் கோவில் கட்டப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பகூர் என்ற இடத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதாவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார்.
அதில் பேசியவர் அயோத்தி விவகாரத்தில் தற்போது உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி இருப்பதாக தெரிவித்தார். அடுத்தபடியாக 4 மாதங்களுக்குள் வானுயர்ந்த அளவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




