மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்து கொள்ளலாம்..!
மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடுசெய்து ஆன்-லைன் வழியில் செலுத்தலாம் என தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் நுகர்வோர் சுயமாக மதிப்பீடு செய்து புகைப்படமெடுத்து சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு வாட்ஸ்-அப் இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பலாம். நுகர்வோர் அனுப்பிய விவரங்களை சரிபார்த்து நூறு யூனிட்டுக்கான கட்டணம் கட்டி விட்டு எஞ்சிய கணக்கிற்கான தொகையை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
கட்டணத்திற்கான தொகையை இணைய வெளியிலேயே செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வு கணக்கீட்டு ஏதாவது சந்தேகம் இருந்தாலோ அவற்றில் அவசியம் இருந்தாலும் மீண்டும் மின் வாரிய பணியாளர்கள் ரீடிங் எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






