மாணவியிடம் தகாத முறையில் பேசிய பேராசிரியர்..!
திருநெல்வேலியில் கல்லூரி மாணவியை மது குடிக்க வரும் படி செல்போனில் கட்டாயப்படுத்தியதாக இரண்டு பேராசிரியர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரில் ஒருவரை கைது செய்து மற்றொருவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் சபாஸ்டின் மற்றும் பால்ராஜ் ஆகியோர் தன்னிடம் விரும்பத் தகாத வகையில் பேசியதுடன் மது அருந்தியதற்கு வரும்படி கட்டாயப்படுத்தியதாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பெற்றோர் அளித்த புகாரில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த செபாஸ்டினை கைது செய்ததாகவும் தலைமறைவான பால்ராஜை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.





