ஹாஸ்பிடலில் இருந்தவாறு பணி செய்யும் முதல்வர்!
உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் CM ஸ்டாலின், 3 நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், ஹாஸ்பிடலில் இருந்தவாறு அலுவலகப் பணிகளை முதல்வர் கவனிப்பதாக அரசு விளக்கமளித்துள்ளது.
இன்று தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் ஆலோசனை செய்த அவர் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து கேட்டறிந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





