கணவனை கொன்று வீட்டிற்குள் புதைத்த கொடூர மனைவி..!
கணவனை கொன்றுவிட்டு பாபநாசம் பட பாணியில் உடலை வீட்டிற்குள் புதைத்த சம்பவம் மகாராஷ்டிராவை அதிர வைத்துள்ளது. மனைவி குடியா தேவி, விஸ்வகர்மா என்பவருடன் நெருங்கி பழகியதை கணவன் விஜய் கண்டித்துள்ளார்.
இதனால், காதலன் உதவியுடன் கணவனை தீர்த்துக் கட்டிய அவர், காதலனுடன் கம்பி நீட்டியுள்ளார். விஜய்யின் சகோதரர் வீட்டிற்கு சென்றபோது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொடூர மனைவியை போலீஸ் தேடி வருகிறது.





