தங்கத்தின் விலை சவரனுக்கு 43 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். பொருளாதார மந்த நிலை நீடித்து வருவதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பிற்பகலுக்கு பின் தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 42 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் 50 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 374 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.