--- --:--:-- --

குடும்ப சண்டையை தடுக்க சென்ற போலீஸ்..!

6

சீர்காழி அருகே குடும்பத்த தகராறு விசாரித்து சென்ற காவல் உதவி ஆய்வாளரின் மண்டை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேலமருவ குடி கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து வைதீஸ்வரன் கோவிலில் காவல் நிலைய சிறப்ப உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவலர் விசாரணைக்கு சென்றுள்ளனர். சம்பவ இடத்தின் உதவியாளர் சீனிவாசனை தகாத வார்த்தையால் திட்டி கட்டையால் தாக்கியுள்ளார்.

 

இதில் தலையில் பலத்த காயமடைந்த உதவியாளர் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon