ரயிலில் இருந்து நிலைதடுமாறி விழுந்து பயணியை மீட்ட காவல் துறையினர்..!
கோவையில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட பொழுது நிலை தடுமாறி விழுந்த பயணியை ரயில் காவல்துறையினர் உடனடியாக காப்பாற்றினார். சேலத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கோவை ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்டுள்ளார்.
அப்போது ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவல்துறையினர் உடனடியாக அவரை காப்பாற்றியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





