நாயின் உடலில் தேசியக் கொடியை கட்டிய நபர்..!
தேனி அருகே தேசியக் கொடியை அவமதித்த நபரை கைது செய்து காவல்துறையினர் பிணையில் விடுவித்தனர். பெரிய குளத்தில் நாய் ஒன்று தேசியக்கொடி கட்டப்பட்ட நிலையில் சுற்றிக் கொண்டிருந்த பொழுது இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பொழுது நபர் ஒருவர் நாயின் உடம்பில் தேசியக் கொடியை கட்டியது தெரிய வந்தது.
வீடியோ காட்சிகள் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் தவறு செய்து விட்டதாக ஒப்பு கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.





