மது கேட்டு தகராறில் ஈடுபட்டவர் மீது வெந்நீரை வீசிய நபர்..!
சேலத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டி மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டவர்கள் மீது வெந்நீர் ஊற்றிய தந்தை மகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் மதுபானம் விற்பனை செய்வதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெனார்த்தனன் என்பவர் நள்ளிரவில் ராதாகிருஷ்ணனின் வீட்டின் கதவைத் தட்டி மதுபானம் கேட்டிருக்கிறார்.
திருடன் என்ற அச்சத்தில் கதவு திறக்காததால் ஜெனார்த்தனன் ஜன்னல் வழியே வந்து கேட்டு தகராறு ஈடுபட்டிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த ராதா கிருஷ்ணன் தனது மகளுடன் சேர்ந்து ஜன்னல் வழியே வெளியே வெண்ணீரை ஊற்றிய நிலையில் ஜனார்த்தனன் முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.







