பள்ளி மாணவியை வெறி தீர கத்தியால் குத்தி காரில் கடத்திய நபர்..!
கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் தாக்கி காரில் கடத்தி சென்றுகொல்ல முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியை மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்தி சென்றது குறித்து போலீசாருக்கு சக மாணவிகள் தகவல் கொடுத்தனர். பதிவெண்ணை கொண்டு காரை போலீசார் துரத்தி பிடித்துள்ளார்.
காரை போலீசார் பிடித்ததும் காரை ஓட்டி வந்தவர் அதிலிருந்து குதித்து தப்பு ஓடிவிட்டார். கடத்தப்பட்ட மாணவி கத்தியால் பலமுறை குத்தப்பட்டு மயங்கிய நிலையில் காரில் கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் காரை ஓட்டி வந்த நபரை தேடி வருகின்றனர். காரை ஓட்டி வந்த நபர் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலை ஏற்க மறுத்ததால் அந்த பெண்ணை கடத்தி கொலை செய்ய முயன்றது தெரிய வந்திருக்கிறது.





