கண் இமைக்கும் நொடியில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்து சென்ற நபர்..!
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே கடை முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேப்பம்பட்டியை சேர்ந்த சதீஷ் என்பவர் நேற்று காலை அங்குள்ள ஹார்டுவேர் கடையில் பொருட்களை வாங்க சென்றபோது சாவியை வைத்து விட்டு சென்று உள்ளார்.
பின்னர் பொருட்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்த போது அவரது வாகனம் மாயமாகி இருந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.







