--- --:--:-- --

வண்டியின் முன் அமரவைக்கப்பட்ட 11 மாத குழந்தை தவறி விழுந்து பலி..!

6

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெற்றோரின் அலட்சியத்தால் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த 11 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

 

அழகாபுரியை சேர்ந்த கனகராஜ், சித்ரா தேவியின் தம்பதியினர் 11 மாத கைக்குழந்தையுடன் துக்க நிகழ்வுக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

 

அவர்கள் சீலநாயக்கன்பட்டி அருகே வளைவில் திரும்ப முயன்றபோது பெட்ரோல் டாங்கில் அமர்ந்திருந்த குழந்தை தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த குழந்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது.

 

11 மாத குழந்தையை தாய் தனது மடியில் வைத்து அழைத்துச் சென்றிருந்தால் விபரீதம் நேர்ந்திருக்காது.

Leave a Reply

Right Menu Icon