ஏப்ரல்.1 முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம்
தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு சோதனை அடிப்படையில் தூத்துக்குடி நிலையில் செயல்படுத்தப்பட்டஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.
அதன்படி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைத்து நியாயவிலை கடைகளிலும் தங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். ஸ்மார்ட் கார்டு எனப்படும் மின்னணு குடும்ப அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை மற்றும் செல்போன் மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2 கோடியே 2 லட்சத்து 31 ஆயிரத்து 394 குடும்ப அட்டைகளுடன் உள்ள நிலையில் நியாயவிலை கடைகளில் கலப்படம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் காமராஜ் கூறினார்.






