--- --:--:-- --

நாயின் தாகம் தணிக்கும் முதியவர்

5

முதியவர் ஒருவர் உள்ளங்கையில் தண்ணீர் பிடித்து வந்து நாய் ஒன்றின் தாகம் தணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் தெரு நாய் ஒன்றுக்கு உயரமாக அமைக்கப்பட்டுள்ள குழாயிலிருந்து உள்ளங்கையில் தண்ணீரை பிடித்து வந்து கொடுக்கிறார்.

 

அவற்றை தாகத்தில் இருந்த நாய் ஒரு நொடியில் குடித்து முடிக்க மீண்டும் குழாயிலிருந்து தண்ணீர் பிடித்து வரும் முதியவர் அதற்கு கனிவுடன் கொடுக்கிறார். வாயில்லா ஜீவனிடம் முதியவர் இரக்கம் காட்டும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon