--- --:--:-- --

பாஜக கூட்டணியில் இணையும் அடுத்த டிக்கெட்..!

4

த்திரபிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் விவசாயிகள் மத்தியில் அதிக ஆதரவை பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியை பாஜக தங்கள் கூட்டணிக்கு இழுத்து வருவதாக கூறப்படுகிறது.

 

5 நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் மாநில அமைச்சரவையில் 2 அமைச்சர் பதவிகள் கொண்ட குழுவிற்கு பாஜக முன்வந்திருப்பதாக தகவல் வெளியானது. இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் அதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிகள் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஆனால் இந்த தகவல்களை ராஷ்டி லோக் தளம் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் மாலிக் மறுத்துள்ளார். இந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று கூறியவர் பொது தேர்தலுக்கு தயாராகும்படி கட்சியினரை வலியுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon