தந்தை மரண செய்தி வலிக்குது..ராகுல்காந்தி வேதனை..!
இந்தியாவின் மதசார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடா யாத்திரையின் நோக்கம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். தற்பொழுது இந்த பாரத் ஜோடா யாத்திரையின் நிறைவு விழா ஸ்ரீ நகரில் நிறைவு பெற்றது.
அப்போது நாட்டு மக்களுக்காக யாத்திரை மேற்கொண்டதாக தெரிவித்தார். தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து தொலைபேசி அழைப்பின் மூலம் தகவல் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்த ராகுல் காந்தி அது வன்முறையை தூண்டுபவர்களுக்கு ஒரு போதும் புரியாது எனவும் தெரிவித்தார்.





