பிரதமர் பற்றி வந்த செய்தி – மத்திய அரசு அதிரடி நீக்கம்!
பிரதமர் மோடி குறித்த பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் youtube இல் இருந்து நீக்கப்பட்டது. லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிபிசி தொலைக்காட்சியில் மோடி மீதான கேள்வி என்ற ஆவணப்படம் எழுப்பப்பட்டது.
இந்த ஆவணப்படத்தில் குஜராத் கலவரத்தின் பொழுது அம்மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யூடியூபிலும் பதிவேற்றும் செய்யப்பட்ட அந்த ஆவணப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
அதற்கு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துக்கள் எழுந்தன. இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் பிரதமர் பதவியில் இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இது போன்ற ஆவண படத்தை ஊக்கப்படுத்த கூடாது என கேட்டுக் கொண்டார். முன்னதாக இந்த ஆவணப்படத்தை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் திருநாள் காங்கிரஸ் உள்ளிட்ட பலர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தனர். யூடியூபில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு இந்த வீடியோவை அனைவரும் விரைந்து பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.






