--- --:--:-- --

விசிக பிரமுகர் தலைமையில் இரவோடு இரவாக விநாயகர் கோவிலை இடித்த 4 பேர் கைது..!

2

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விநாயகர் கோவில் இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கோவிலை இடித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

 

பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோயில் சிதலமடைந்திருந்த நிலையில் இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை விசிக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்திருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீதமுள்ள இடத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் இரவு காரில் வந்த 4 பேர் கோவிலை இடித்துள்ளனர்.

 

இந்து முன்னணி அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில் அந்த நான்கு பேரையும் கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர். விசாரணையின் பொழுது தெய்வசிகாமணி தான் கோவிலை இடிக்க சொன்னதாக அவர்கள் தெரிவித்த நிலையில் தெய்வசிகாமணியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon