--- --:--:-- --

திருமணம் நடைபெற்ற அன்றே புது மாப்பிள்ளை உயிரிழப்பு..!

2

திண்டிவனம் கோட்டை குப்பம் பகுதியில் திருமணம் நடைபெற்ற அன்றே சாப்ட்வேர் இன்ஜினியராக புது மாப்பிள்ளை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் கூட்டு குப்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் காதல் திருமணம் பெற்றோர் சம்பந்தத்துடன் புதுச்சேரியில் நேற்று காலை நடத்துள்ளது.

 

கோட்டகுப்பத்தில் தனியார் தெரு மாதிரி மண்டபத்தில் நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவரும் அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். சுரேஷ்குமார் வெகு நேரமாக வெளியே வராததால் உறவினர்கள் சென்று பார்த்துள்ளனர்.

 

மயங்கிய நிலையில் இருந்தவரை புதுச்சேரி ஜிப்மர் கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon