ட்ராபிக்கை நிறுத்திய மலைப்பாம்பு..!
கேரளாவில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்தது. முக்கிய சாலையில் இரண்டு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு சாவகாசமாக ஒரு சாலையை கடந்து எதிர் திசையில் இருந்த புதருக்குள் சென்று மறைந்தது.
இதனை கண்ட வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் வாகனங்களை இருபுறமும் நிறுத்தி பாம்பு செல்லும் வரை காத்திருந்தனர். மேலும் அந்த பாம்பு வேகமாக செல்ல வேண்டி ஹாரன் அடிக்காமல் பொறுமையாக காத்திருந்து சென்றனர்.
இதனை பலர் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தை பதிவிட்டது வைரல் ஆகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





