திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்யத்துவங்கியது. திடீரென பெய்த மழையால் வெப்பம் குறைந்து மிதமான சூழல் நிலவியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





