ரஜினிக்கு மேடையிலேயே குடை பிடித்த அமைச்சர்..!
நடிகர் ரஜினிக்கு மேடையிலேயே குடை பிடித்த அமைச்சரின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மறைந்த புனித் ராஜ்குமாரின் தொண்டு மற்றும் சேவையை கவுரவிக்கும் விதமாக அவருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் அறிவித்தார்.
இந்த விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் விழாவில் கலந்து கொண்டு புனித் ராஜ்குமாரின் மனைவியிடம் கர்நாடக ரத்னா விருது வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் பொழுது ரஜினிகாந்த்திற்கு அமைச்சர் ஒருவர் குடை பிடித்த போட்டோ வைரல் ஆகி வருகிறது. அதாவது அமைச்சரே அவருக்கு குடை பிடித்திருக்கிறார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.





