நிரம்பிய மேட்டூர் அணை ! நீர்திறப்பை குறைத்தது அரசு
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் நீர்திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியிலிருந்து 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 68,000 கன அடியிலிருந்து 59000 கனஅடியாக குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 120.70 அடியாகவும் நீர் இருப்பு 94.59 டிஎம்சி ஆகவும் இருக்கிறது. இதனையடுத்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.





