கனவில் வந்த பேயால் நிஜத்தில் கிணற்றில் குதித்த ஆண்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேய் விரட்டுவதாக கனவு கண்டு பயத்தில் கிணற்றில் விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஐரேனிபுரம் அருகே உள்ள அயனிவிளை பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பேய் விரட்டுவது போல கனவு கண்டு இருப்பதாக கூறப்படுகிறது. பயத்தில் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்த ஸ்டீபன் அருகிலுள்ள நாகதேவி கோவில் கிணற்றில் குதித்துள்ளார்.
வழக்கம்போல் காலையில் கோவிலுக்கு வந்த அர்ச்சகர் ஸ்டீபன் கிணற்றில் இருப்பதை பார்த்து ஊர் மக்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். நிகழ் விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வளையை கிணற்றில் இறக்கி ஸ்டீபனை பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயங்களுடன் மீட்கப்பட்ட ஸ்டீபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






