விழா நடத்திய செலவில் அரசுப் பள்ளிகளைப் பராமரித்திருந்தால் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம் – எடப்பாடி பழனிசாமி
திருத்தணி அருகே பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே அரசுப் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்குத்தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப் பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, ஆர்.கே.பேட்டை, கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மோகித் எனும் மாணவர் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் அவர் பள்ளிக்குச் சென்றிருந்தபோது, திடீரென பள்ளி வளாகத்தில் உள்ள கைப்பிடி சுவர் இடிந்து மாணவர் மீது விழுந்தது. இதில், மோகித் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். மகனின் உடலை பிரேத பரிசோதனைக்குக் கொடுக்க மறுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து கல்வி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், “திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்குத்தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப் பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா? பாழடைந்த அரசுப் பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப் பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர் செய்யுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.





