இன்று இரவு வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!
தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இன்று கனமழை பெய்யக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நாளை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும், நாளை மறுதினம் தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





