குவாட்டர் பாட்டிலில் மிதந்த குட்டித்தவளை..!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு அருகே டாஸ்மாக் மதுபான கடை ஒன்று உள்ளது. அந்த டாஸ்மாக் மதுபானக் கடையில் பாண்டி என்பவர் மது பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய குவாட்டரில் கருப்பு நிறத்தில் குட்டித் தவளை ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து குடி பிரியர்கள் இடத்தில் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.





