பாலம் இல்லாததால் சடலங்களை தண்ணீரில் சுமந்து செல்லும் அவலம்
வேலூர் மாவட்டம் சேர்பாடி ஊராட்சியில் ஆற்று பாலம் கட்டி தர வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சேர்பாடி ஊராட்சியில் ஆற்றுப்பாலம் இல்லாத காரணத்தால் இழந்தவர்களின் சடலங்களை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தண்ணீரில் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக அங்கு ஆற்று பாலம் அமைத்து தர வேண்டும் என அணைக்கட்டு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.






