இரு சக்கர வாகன ஒட்டி நிலைதடுமாறி விழுந்த சம்பவம்.!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் பக்கவாட்டுப் பகுதியில் நிலை தடுமாறி விழுந்த நிலையில் பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நூல் இழையில் உயிர் தப்பியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
புதூர் பகுதியில் உள்ள குறுகலான சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்ற நிலையில் எதிர் திசையில் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
ரோடு ஈரமாக இருந்து வருவதை கண்ட பைக்கில் வந்தவர்கள் ஓரமாக செல்லும் போது நிலைதடுமாறி பேருந்து பக்கவாட்டுப் பகுதியில் சக்கரத்துக்கு அருகே சாய்ந்து விழுந்தனர்.
பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நிலையில் இருவரும் உயிர் தப்பிய நிலையில் அதில் ஒருவர் ஏதும் நிகழாது போல செல்போனை பயன்படுத்திக்கொண்டே சம்பவத்தை கடந்துசென்றார். கடந்த 17ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.






