--- --:--:-- --

பெருந்தொற்றால் உயிரிழந்த மனைவியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த கணவர்..!

7

த்திரபிரதேசத்தில் பெருந்தொற்றால் உயிரிழந்த மனைவியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் முதியவர்களில் சடலத்துடன் தவித்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. அங்குள்ள கிராமத்தை சேர்ந்த திலக்தாரி என்பவரது மனைவி கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

 

பெருந்தொற்று காரணமாக மனித உடலை அடக்கம் செய்ய முதியவருக்கு உதவ கிராமமக்கள் மறுத்துள்ளனர். இதையடுத்து அவர் தனது மிதிவண்டியில் மனைவியின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

 

ஆனால் அவரால் முடியாததால் சாலையில் மனைவியின் சடலத்துடன் தவித்துள்ளார். இதன் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முதியவருக்கு உதவி செய்து உடலை தகனம் செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon