வீடும் கட்டவில்லை..! வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்குறாங்க..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அருகே உள்ள கிராமத்தில் ஒருவரின் வீடு கட்டும் திட்டத்தில் 13 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடு கட்ட இயலாது என்று கூறியதால் கட்டுமான பணியை ஊராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படும் நிதியில் நிலையில் 75% அவர்கள் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தூண்கள் மட்டுமே எழுப்பி உள்ளதாக பயனாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கட்டுமானத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் தரம் இல்லாமல் இருப்பதாக பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நல்ல முறையில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






