திருமண கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததில் மிரண்டு ஓடிய குதிரை..!
ராஜஸ்தானில் திருமண கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடிக்க பட்டதால் மணமகனை ஏற்றி வந்த குதிரை மிரண்டு தாறுமாறாக ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அஜ்மீர் மாவட்டத்தில் ராம் கிராமத்தில் நிகழ்ந்த திருமண ஊர்வலத்தில் வந்தவர்களில் ஒருவர் பட்டாசை கொளுத்திப் போட்டார்.
பட்டாசு வெடித்த சப்தம் கேட்டு மிரண்டு போன குதிரையை தலைதெறிக்க மணமகனை சுமந்துகொண்டு நாலுகால் பாய்ச்சலில் ஓடியது.நான்கு கிலோமீட்டர் தொலைவில் அந்த குதிரையும், மணமகனும் கண்டுபிடிக்கப்பட்டன.
அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.







