--- --:--:-- --

மூன்று பேரை கொடூரமாக கடித்த குதிரை சில நிமிடத்தில் உயிரிழப்பு..!

10

டலூரில் குதிரை கடித்து மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் பொதுமக்கள் துரத்தி சென்றதில் குதிரையும் உயிரிழந்தது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் லோகேஸ்வரன் என்ற சிறுவனை அங்கிருந்த குதிரை கடித்து விரட்டி உள்ளது.

 

இதனை தொடர்ந்து ஊருக்குள் சென்று மேலும் இரண்டு பெண்களை குதிரை கடித்துள்ளது. படுகாயம் அடைந்த மூன்று பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

பொதுமக்கள் துரத்தி சென்ற பொழுது அங்கிருந்த ஒரு பள்ளத்தில் குதிரை தடுமாறி விழுந்தது. குதிரையை மேலே இழுத்து கட்டி போட்ட நிலையில் சிறிது நேரத்தில் குதிரை உயிரிழந்தது. இது தொடர்பாக குதிரையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Right Menu Icon