--- --:--:-- --

மறைந்த முன்னாள் அமைச்சரின் மனைவியின் சிறை தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்..!

1

ருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

 

1991முதல் 1996 ஆம் ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஏ.எம். பரமசிவன். வருமானத்திற்கு அதிகமாக 38 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது மனைவிக்கு ஓர் ஆண்டு சிறை தண்டணையும் விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணை இருந்த பொழுது 2015 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஏ.எம். பரமசிவன் காலமானார்.

 

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஏ எம் பரமசிவனின் மனைவிக்கும் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது.

 

Right Menu Icon