--- --:--:-- --

சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை ..!

3

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கெலமங்கலம் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

 

இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த ஒரு மாத காலமாக வெயில் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொது மக்களுக்கு கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Right Menu Icon