--- --:--:-- --

இந்தியாவில் வெயில் கடுமையாக உள்ளது..!

4

ந்தியாவில் வெயில் கடுமையாக இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அடுத்த வாரம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது.

 

இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இவ்விரு போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் செயல்பட்டார். இந்நிலையில் நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர். இருப்பினும் 353 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

நேற்று ராஜ்கோட்டில் நடந்த 3 ஆவது மேட்ச்சின் போது வெயில் சற்று அதிகம் காணப்பட்டுள்ளது. அதாவது 32 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் நிலவியதால் ஆஸ்திரேலிய வீரர்கள் அடிக்கடி தண்ணீரை எடுத்துக் கொண்டனர். இந்நிலையில், இதுவரையில்லாத அளவுக்கு கடுமையான வெப்பத்தில் விளையாடியதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது. அவரைப் போன்று இன்னொரு வீரரான லபுஸ்சேன் உள்ளிட்ட சிலரும் வெயில் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நேற்று நடந்த மேட்ச்சின்போது ஸ்டீவன் ஸ்மீத் சேரில் உட்கார்ந்து தண்ணீர் குடித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

Right Menu Icon