--- --:--:-- --

திருடச் சென்ற இடத்திலேயே கதவில் சிக்கி கொண்ட தலை..!

14

திருட சென்ற இடத்தில் கதவின் இடையில் தலை சிக்கி திருடன் உயிரிழந்த விசித்திர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் விசைத்தறி ஆலை உள்ளது. போதிய வேலை இல்லாததால் விசைத்தறியாளை கடந்து சில நாட்களாக செயல்படாமல் இருந்ததாக தெரிகிறது.

 

இந்நிலையில் விசைத்தெரியாளர் ஜாபித் என்ற நபர் ஆலைக்குள் நுழைய முயற்சித்துள்ளார். கதவை பாதித் திறந்து உள்ளேயும், தலை கதவினிடையே சிக்கிக் கொண்டது.

 

திருடச் சென்ற இளைஞரின் தலை கதவின் உள் பக்கமும், உடல் கதவின் வெளிப்பக்கமும் சிக்கிக் கொண்டது. எவ்வளவு முயன்றும் தலையை வெளியே கொண்டு வர முடியவில்லை. இதனால் திருடன் மூச்சு திணறி உயிரிழந்தான்.

 

Right Menu Icon